முதியோருக்கு கைப்பிடிப்பு சேவை

முதியோருக்கு கைப்பிடிப்பு சேவை

1 mins read

ஈசூனில் வசிக்கும் முதியோருக் கும் அவர்களின் பராமரிப்பாளர் களுக்கும் கைப்பிடிப்பு சேவையை அளிக்க ஈசூன் ஸ்திரீட் 81, புளோக் 838ல் புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது. 'குட்லைஃப் எட் ஈசூன்' நிலையம் முதியோருக்கான நல் வாழ்வு மற்றும் வள நிலையமாக வும் செயல்படும். மான்ஃபர்ட் கேர் அமைப்பு நடத்தும் இச்சேவைகளுக்கு நீ சூன் சமூக மன்றம் ஆதரவளிக் கிறது. நிலையத்தை சட்ட, உள் துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று திறந்து வைத்தார். கைப்பிடிப்பு சேவையை வழங்கிக் கொண்டிருக்கும்போது தொண்டூழியர்கள் முதியவர்க ளுடனும் பராமரிப்பாளர்களுடன் உரையாடுவார்கள். அப்போது அவர்களுக்கு ஏதேனும் பிரச் சினையிருந்தால் அவற்றைத் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.