துடிப்பாக முதுமையடைதல் விழாவில் 1,000க்கு மேற்பட்டோர் பங்கேற்பு

துடிப்பாக முதுமையடைதல் விழாவில் 1,000க்கு மேற்பட்டோர் பங்கேற்பு

1 mins read

முதியோரிடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பிரபலப்படுத்த மக்கள் கழகம் நேற்று செம்பவாங் டிரைவில் நடத்திய துடிப்பாக முதுமையடைதல் கேளிக்கை விழாவில் 1,000க்கு மேற்பட்ட முதியவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ஏற்பாட்டில் 'ஸும்பா' கூட்டு உடற்பயிற்சி, கூ டெக் புவாட் மருத்துவமனையின் எற்பாட்டில் அடிப்படை சுகாதாரப் பரிசோதனை நிகழ்ச்சி, ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப் பின் ஏற்பாட்டில் 'டிமென்‌ஷியா' எனும் முதியோருக்கான ஞாபக மறதி நோய் பற்றிய குறுநாடகம் போன்றவையும் இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு அட்மிரல்டி, கான்பரா, கம்பாஸ், செம்பவாங், உட்லண்ட்ஸ் ஆகிய செம்பவாங் குழுத் தொகுதிகளும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன. அக்குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திருவாளர் கள் கோ பூன் வான், ஓங் யி காங், அம்ரின் அமின், விக்ரம் நாயர், டாக்டர் லிம் வீ கியாக் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.