மின்னிலக்க தயார்நிலைப் பயணத் தில் சிங்கப்பூரர் எவரும் பின்தங்கி விடக்கூடாது. இதன் அடிப்படை யில்தான் மக்களுக்கு மின்னிலக் கம் தொடர்பான உதவிகளை வழங்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரி வித்துள்ளார். வெஸ்ட் கோஸ்ட் சமூக மன் றத்தில் நேற்று நடைபெற்ற மின் னிலக்க விழாவில் 'டெக் கனக்ட்' எனும் திட்டத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் உரையாற்றி னார். "டெக் கனக்ட் என்பது தங்க ளின் மின்னிலக்கச் சாதனங்க ளைப் பயன்படுத்த உதவி தேவைப் படுவோருக்கு அளிக்கப்படும் புதிய உதவித் திட்டம். "இந்தத் திட்டம், பிடோக், சுவா சூ காங், கம்போங் சாய் சீ, அவர் தெம்பனிஸ் ஹப், பொங்கோல் விஸ்டா, ராடின் மாஸ், உலு பாண்டான், வெஸ்ட் கோஸ்ட் ஆகிய எட்டு சமூக மன்றங்களில் செயல் படும். "அங்கு சென்று 'டெக் கனக்ட் காக்கிஸ்' எனும் மக்கள் கழக அதிகாரிகளின் உதவியை நாட லாம். அவர்கள் உங்களுடன் அமர்ந்து உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் உதவி செய்வார்கள்.
நேற்றைய மின்னிலக்க விழாவில் கலந்துகொண்ட மூத்த குடியிருப் பாளர் ஒருவர் தமது திறன்பேசியில் மின்னிலக்க சேவைகளைப் பயன்படுத்த கற்றுக்கொண்டதை அமைச்சர் ஈஸ்வரனிடம் (நடுவில்) காண்பிக்கிறார். படம்: அமைச்சர் ஈஸ்வரன் ஃபேஸ்புக்

