'சர்க்கரைக்கு எதிரான வரி விதிப்பு அதிகம் உதவாது'

'சர்க்கரைக்கு எதிரான வரி விதிப்பு அதிகம் உதவாது'

2 mins read

நீரிழிவுக்கு எதிராக சிங்கப்பூர் தொடுத்திருக்கும் போரில் சர்க்க ரைக்கு எதிரான வரி விதிப்பு அதிக பலனைத் தராது என்று ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற நீரிழிவு நிபுணர் தெரிவித்துள்ளார். நீரிழிவுக்கு எதிரான போரின் ஓர் அங்கமாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சுவை பானங்க ளுக்கு சர்க்கரை வரி விதிப்பது பற்றி சிங்கப்பூர் பரிசீலித்து வரு கிறது. சிங்கப்பூர் மக்கள் உட்கொள் ளும் சர்க்கரையின் அளவில் மூன் றில் ஒரு பகுதி சுவை பானங்களி லிருந்து வருகிறது என்பதால், இந்தப் பரிசீலனை தலைகாட்டி யது.

"இத்தகைய வரியை நான் எதிர்க்கவில்லை. ஆனால், 70 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களில் ஒன்பதில் ஒருவருக்கு இருக்கும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவ தில் இந்த முயற்சி அதிக பலன் தரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை," என்று ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் ஸிம்மட் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித் தார். "இந்த முயற்சி நல்லதல்ல என்று கூறமாட்டேன். ஆனால், இதனால் மிகக் குறைந்த அளவே பலன் கிட்டும். நீரிழிவுக்குக் கார ணங்களாகப் பலவற்றைக் கூற லாம். உடற்பயிற்சி, மரபியல், மன உளைச்சல் போன்றவை அவற்றில் சில," என்றார் பேராசிரியர் ஸிம்மட். இன்று இங்கு தொடங்கும் இரண்டு நாள் நீரிழிவு பற்றிய அமைச்சர்நிலை மாநாட்டில் முக் கிய உரை நிகழ்த்தவிருக்கும் மூன்று பேரில் பேராசிரியர் ஸிம்மட் டும் ஒருவர். மற்ற இருவர் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த வர்கள். இன்றைய மாநாட்டை துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தொடங்கி வைப்பார்.