கோல்டன் வால் செண்டர் $276.2 மில்லியனுக்கு ஒட்டுமொத்த விற்பனை

கோல்டன் வால் செண்டர் $276.2 மில்லியனுக்கு ஒட்டுமொத்த விற்பனை

1 mins read

குத்தகையற்ற வர்த்தகச் சொத்தான 'கோல்டன் வால் செண்டர்' (படம்) ஒட்டு மொத்தமாக $276.2 மில்லி யனுக்கு விற்கப்பட்டுள்ளது. 'வோர்ல்ட்வைட் ஹோட்டல்' நிறுவனங்களுக்குச் சொந்தமான 'சிட்டி வியூ ஹோல்டிங்ஸ்' நிறுவனத் துக்கு இந்த இடம் விற்கப்பட்டுள்ளது. 'சிட்டி வியூ ஹோல் டிங்ஸ்' நிறுவனத்தின் கிளை நிறுவனமான 'வோர்ல்ட்வைட் ஹோட்டல்', 'ஹோட்டல் 81' உள்ளிட்ட ஹோட்டல்களை நடத்துகிறது. குத்தகையின் தொடக்க விலையான $260 மில்லியனைவிட 6% அதிக மான விலையில் ஹோட்டல் விற்கப்பட்டது. கிட்டத்தட்ட 2,251.9 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கோல்டன் வால் செண்டர், ரோச்சோர் எம்ஆர்டி நிலையத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. இது லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்திலிருந்து 400 மீட்டர் தூரத்தில் உள்ளது.