சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி அக்டோபர் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 4.3% வளர்ச்சி கண்டது. செப்டம்பரில் 0.1% குறைந்த உற்பத்தி, பொருளியல் நிபுணர்கள் கடந்த மாதத்திற்கு முன்னுரைத்திருந்த 2.6 விழுக்காட்டையும் தாண்டியது. நிலையற்ற, உயிர் மருத்துவ உற்பத்தித் துறையைக் கணக்கில் எடுக்காவிட்டால், அக்டோபர் மாத உற்பத்தி 3% வளர்ச்சி கண்டதாக பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்ட ஆரம்பகட்ட புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. பருவத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட மாத அடிப்படையில், மூன்று மாத மந்தநிலைக்குப் பிறகு அக்டோபருக்கான உற்பத்தி 2% ஏற்றம் கண்டது. ஆயினும், மின்னியல் உற்பத்தி விகிதம் இரண்டாவது முறையாகக் குறைந்துள்ளது. ஆண்டு அடிப்படையில் இது 2.7% குறைந்தது.
எதிர்பார்த்த அளவைவிட உயர்ந்த தொழிற்சாலை உற்பத்தி
1 mins read

