நீரிழிவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகாரிகள் வெற்றி அடைய விரும்பினால் பொது இடங்களில் அவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்று சுகாதார மூத்த துணையமைச்சர் ஏமி கோர் தெரிவித்திருக்கிறார். கிராண்ட் கோப்தோர்ன் வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டலில் நேற்று நடந்த அமைச்சர்நிலைக் கூட்டத்தில் பேசிய அவர், ஊழியர்கள் பலர் விரைவு உணவைச் சாப்பிடுவதால் அல்லது இரவில் தாமதமாக உறங்குவதால் அவர்களது உடல்நலம் பாதிப்படைவதாகக் கூறினார். முதலாளிகள் தங்களின் ஊழியர்களை சுகாதாரத்துடன் வைத்திருப்பதன் மூலம் உற்பத்தித்திறன் கொண்ட ஊழியரணியால் பயனடைவர் என அவர் கூறினார். உடல்நல குறைப்பாட் டால் உற்பத்தித்திறனுக்கு நேரிடும் இழப்பு, அதனை தடுப்ப தற்கான பணச்செலவைவிட பத்து மடங்கு அதிகம் என்று குறிப்பிடும் ஆய்வு ஒன்றையும் டாக்டர் கோர் சுட்டினார்.
ஏமி கோர்: நீரிழிவை முறியடிக்க வேலை இடங்களுக்கும் பங்கு உண்டு
1 mins read

