தேர்வின் கேள்விகளைக் கசியவிட்ட விரிவுரையாளர் பதவி நீக்கம்

தேர்வின் கேள்விகளைக் கசியவிட்ட விரிவுரையாளர் பதவி நீக்கம்

1 mins read

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் நிதி நிர்வாகத் துறைக்கான தேர்வுக் கேள்விகளை முன்கூட்டியே வெளியாக்கிய விரிவுரையாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்வுக்கான கேள்விகள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வை எழுத இருந்த 590 மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்தத் தேர்வு மாணவர்களின் ஒட்டுமொத்த மதிப்பளவுக்கு 50 விழுக்காடு பங்களிக்கும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்தது. விசாரணை நிறைவடைந்ததும் தேர்வுக்கான கேள்விகளை வெளியாக்கிய பகுதி நேர விரிவுரையாளர் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அவருக்கு மின்னஞ்சலும் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளன.