உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள பல வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி கட்டடங்களுக்குப் பின்புறத்தில் உள்ள கான்கிரீட் தரையில் பாசி படிந்துள்ளது. அண்மையில்தான் அப்பகுதி யில் உள்ள கான்கிரீட் தரை மறுசீரமைக்கப்பட்டது. பாசி படிந்த தரையைக் கண்ட குடியிருப்பாளர் கள் நகர மன்றத்தில் புகார் செய்தனர். உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 81ல் அமைந்துள்ள பல அடுக்குமாடி கட்டடங்களின் தரைத் தளத்துக்கு அருகில் உள்ள பாசி படிந்த தரையைக் காட்டும் படம் Reddit கலந்துரையாடல் இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டது.
தரையில் பாசி படிந்து சில மாதங்களாகிவிட்டதாக Reddit கலந்துரையாடல் இணையப் பக்கத்தைப் பயன்படுத்தும் ஒருவர் தெரிவித்தார். Reddit கலந்துரையாடல் இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தெரிய வில்லை. தரையில் பாசி படிந்திருப்பதால் அவ்வழியாக நடந்து செல்பவர்கள், குறிப்பாக முதியோர் வழுக்கி விழும் அபாயம் இருப்பதாகச் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பாசி படிந்த தரை. படம்: Reddit

