சிறாரை ஏழ்மையிலிருந்து மீட்க சமூக ஊழியர்கள் சில பரிந் துரைகளை முன்வைத்துள்ளனர். முன்வைக்கப்பட்டுள்ள பரிந் துரைகளில் அவர்களது பெற் றோரை ஊக்குவிப்பதும் ஒன்று. ஏழ்மையிலிருந்து மீண்டு வந்த மற்ற பெற்றோரைக் கொண்டு ஏழ்மையில் வாடுபவர்களுக்கு உதவி செய்ய வைக்கலாம் என்று அப்லிஃப்ட் எனப்படும் அமைப்பு களுக்கிடையிலான புதிய பணிக் குழுவுக்கான கலந்துரையாடலில் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை சிங்கப்பூர் சிறார் மன்றத்தின் துணை இயக்குநர் திருவாட்டி ஜோய் லிம் நேற்று நடைபெற்ற கலந்துரை யாடலில் முன்வைத்தார். ராடின் மாஸ் சமூக மன்றத்தில் மூன்று மணி நேரத்துக்கு நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றவர்களில் அவரும் ஒருவர்.
சிறாரை ஏழ்மையிலிருந்து மீட்கும் இலக்குடன் அப்லிஃப்ட் பணிக்குழு செயல்பட்டு வருகிறது. அதன் கலந்துரையாடலில் பங்கேற்ற சமூக ஊழியர்கள் சிறாரின் நிலையை மேம்படுத்த பல யோசனைகளை முன்வைத் தனர். அமைப்புகள், முகவைகள், பள்ளிகள் ஆகியவற்றுக்கு இடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு தேவை என்று கலந்துரையாடலில் தெரிவிக்கப் பட்டது.

