கவர்ச்சியான பரிசுகளுடன் தமிழ் முரசு சந்தா

கவர்ச்சியான பரிசுகளுடன் தமிழ் முரசு சந்தா

2 mins read
d9e2584b-4833-4cd4-a81c-6145cbee300b
-

இர்ஷாத் முஹம்மது

சிங்கப்பூரின் ஒரே தமிழ் மொழி நாளிதழான தமிழ் முரசு அதன் வாசகர்களுக்குக் கவர்ச்சிமிகு பரிசு களை (படம்) வழங்குகிறது. கடந்த மாதம் தொடங்கிய அந்தச் சிறப்புச் சலுகை, நாளை வெள்ளிக்கிழமை யுடன் முடிவடைகிறது. தமிழவேள் கோ சாரங்கபாணி அவர்களால் 1935ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ் முரசு, கடந்த 83 ஆண்டுகளாக சிங்கப்பூர் தமிழ் மக்களுக்கு அன்றாடம் செய்திகளை வழங்கிவருகிறது. அதன் வாசகர்களில் மேலும் பலரைச் சந்தாதாரர்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எஸ்பிஎச் நிறுவனம், ஓராண்டு, ஈராண்டுத் சந்தாத் திட்டங்களில் சேருவோ ருக்கு $426 வரை மதிப்புள்ள சிறப்புப் பரிசுகளை வழங்குகிறது. எட்டு வகைப் பரிசுகள் அறி முகப்படுத்தப்பட்டிருந்தாலும் தற் போது ஐந்து மட்டுமே மீதம் உள் ளன. ஒரு மாதத்திற்கான சந்தா தொகை $17.90 மட்டுமே. நாளி தழுடன் இணையத்தில் மின்- இதழையும் பெறும் வசதியையும் சந்தாதாரர்கள் பெறலாம்.

ஒரே நேரத்தில் நான்கு இணையச் சாதனங்கள் வழி நாளிதழை வாசிக்க முடியும். தமிழ் முரசில் வெளிவரும் சிறப்புக் கட்டுரைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் இணை யம் மூலம் பார்க்கலாம். ஏழு நாட் களின் செய்தி ஆவணங்களும் உங்களின் கைவசம் இருக்கும். ஓராண்டுத் திட்டத்தில் சேர் வோர் 'ஜப்ரா ஹலோ ஃப்யூஷன் புளூடூத் ஹெட்செட்' அல்லது 'பிலிப்ஸ் டேபில் கிரில்' பொருட் களில் ஒன்றைத் தேர்ந்தெடுக் கலாம். இரண்டு ஆண்டுத் திட்டத் தில் பதிவு செய்வோர் 'பிலிப்ஸ் பிரெட் மேக்கர்', 'குக்கூ ரைஸ் குக்கர்' அல்லது 'பானசோனிக் மைக்ரோவேவ் அவன்' ஆகிய பொருட்களில் ஒன்றைப் பரிசாகப் பெறலாம். ஆகவே, உடனே சந் தாத் திட்டத்தில் சேர்ந்து கவரச்சி யான பரிசுகளைப் பெறுங்கள்.