சமுதாய நிலைமாற்றத்திலும் சமு தாய ஒன்றிணைப்பிலும் எழும் சவால்களைச் சமாளிக்க சிங்கப்பூ ருக்குத் தேவை ஒரு புதிய சமுதாய ஒருங்கிணைவு என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். சமுதாய அளவில் முன்னேறிச் செல்பவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாது பின்தங்கியிருப்பவர் களுக்கு உதவ, தனிநபர்களும் குழுக்களும் முன்வர வேண்டும் என்றும் அப்போதுதான் அனைவ ரும் சேர்ந்து ஒரு முழு சமுதாய மாக முன்னேற முடியும் என்றும் திரு சான் விளக்கினார்.
ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குளோபல் அவுட்லுக்' கருத்தரங்கில் ஒரு புதிய சமுதாய ஒருங்கிணைவு தேவைப்படுவது குறித்து பேசிய அமைச்சர், பின்தங்கியவர்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் கொள் கையாக இருந்தாலும், இத்தகைய வர்களுக்கு உதவுவதை சிங்கப் பூரர்கள் தங்கள் ஒட்டுமொத்த பொறுப்பாகக் கருத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

