நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (என்டியு) துணை நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஒருவர் மீது பல்வேறு அமைப்புகளையும் தமது பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றிய குற்றங்கள் நேற்று சுமத்தப்பட்டுள்ளன. 'என்டியுடிவ்' நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான 55 வயது திரு செங் சூங் ஹுங் (மேல், இடது), $225,000 மதிப்புள்ள பரிவர்த்தனைகள் மூலம் ஏமாற்றிய 22 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். மேலும் 42 வயது திருவாட்டி லுயிஸ் லாய் பெய் சியனை (மேல், வலது) என்டியு, 'என்டியுடிவ்', 'டெக்பிஸ் எக்சலரேட்டர்' ஆகிய நிறுவனங்களை ஏமாற்றச் சொல்லி தூண்டிய குற்றமும் செங் மீது சுமத்தப்பட்டது. லாய் மீது நேற்று மோசடி குற்றங்கள் சுமத்தப்பட்டன. செங்கைத் தவிர, லாய் மற்றோர் ஆடவரான திரு வோங் சீ லியோங்குடன் சேர்ந்து என்டியுவை $30,000 மதிப்புள்ள பரிவர்த்தனைகள் மூலம் ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. செங்குக்கு $50,000 பிணையும் லாய்க்கு $20,000 பிணையும் அளிக்கப்பட்டன.
'என்டியு' துணை நிறுவன முன்னாள் இயக்குநர் மீது மோசடி குற்றச்சாட்டு
1 mins read
-

