நீதிமன்ற இணைய வாசலில் 200 வழக்குக் கோப்புகள் கள்ளத்தனமாக பார்க்கப்பட்டன

நீதிமன்ற இணைய வாசலில் 200 வழக்குக் கோப்புகள் கள்ளத்தனமாக பார்க்கப்பட்டன

1 mins read

அரசு நீதிமன்றத்தின் இணையவாசல் மூலம் வழக்குகள் தொடர்பான 200 கோப்புகள் சட்ட விரோதமாக சில சந்தேகநபர்களால் பார்க்கப் பட்டன என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த குற்றவியல் வழக்கு பதிவு மற்றும் நிர்வாக முறைக்குள் நுழைந்து, அந்த நபர்கள் மின்னியல் வழக்குகளைப் பார்த்திருக்கி றார்கள் என்று அரசு நீதிமன்றம் கூறியது. பொதுவாக, அந்தக் கோப்புகளைக் காண அனுமதி வைத்திருக்கும் குற்றம் சாட்டப்பட்ட நபர்தான் தனது சிங்பாஸ் மறைச்சொல்லைக் கொண்டு அவ்வாறு செய்ய முடியும்.

நீதிமன்ற இணையவாசல் முறையில் யாரோ கள்ளத்தனமாக நுழைந்திருக்கலாம் என்று இம் மாதம் 1ஆம் தேதி அரசு நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது. அத்துமீறி நுழைந்து 223 மின் வழக்குகளின் ஆவணங்கள் பார்க்கப்பட் டன என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. குறைபாடுகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு விட்டன என்றும் வழக்குகளின் நம்பகத்தன்மை பாதிக்கப்படவில்லை என்றும் அரசு நீதிமன்றம் தெரிவித்தது.