உற்பத்தித்திறன், புத்தாக்க வரிச் சலுகைத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருமான வரி அதிகாரிகளிடம் போலித் தகவல் தந்த திரு கங்காதரன் ராமு கந்த வேலு (படம்) தம் வழக்கறிஞர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். திட்டத்தின்கீழ் தமக்கு வழங்குதொகை கிடைக்கச் செய்வதற்காக 56 வயது கங்காதரன் 2014ஆம் ஆண்டில் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் பொய் சொன்னார். வர்த்தகங்களுக்காக உருவாக்கப் பட்ட திட்டம் உற்பத்தித்திறனை ஊக்குவித்து வழங்குதொகைகளையும் போனஸ் தொகைகளை யும் வழங்கும். இத்திட்டத்தைத் தவறாகப் பயன் படுத்திய கங்காதரன், தமது மகன், சகோதரி இருவரும் தம்முடைய நிறுவனமான 'கங்கா & கோ' வின் ஊழியர்கள் என்றும் தமது நிறுவனத் துக்கு $16,010 செலவு ஏற்பட்டதாகவும் போலித் தகவல் கொடுத்தார். "சட்டத்தை மதிக்காமல் அதன் நம்பகத்தன் மைக்கு ஊறு விளைவித்துவிட்டார் கங்காதரன்," என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தெரிவித்தார்.
'பிஐசி' திட்ட மோசடி: பதவி இழந்த வழக்கறிஞர்
1 mins read

