ஓசிபிசி சைக்கிள் பந்தயம் காரணமாக மே 7ஆம் தேதி சாலைகள் சில மூடப்படுகின்றன. அதனால் 22 பேருந்து சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் பேருந்து சேவைகள் மே7ஆம் தேதி காலை 11 மணி வரை இயங்காது என்று எஸ்பிஎஸ் செவ்வாய்க்கிழமை (மே2) அறிக்கை வெளியிட்டது.
பாதிக்கப்படும் பேருந்து சேவை எண்கள்: 10, 11, 14/14A, 16, 31, 32, 33, 48, 56, 57, 70M, 100, 111, 130, 131, 133, 158, 162M, 186, 196, 400 மற்றும் 502.
பேருந்து எண் 400 காலை 9:30 மணியில் இருந்து வழக்கம்போல் செயல்படும்.
அதேபோல் பேருந்து எண் 48 சேவையில் இருக்கும் ஆனால் அது காலை 9:45 மணி வரை மாற்று வழிகளில் செல்லும். அது வழக்கமாக நிற்கும் பேருந்து நிறுத்தங்களிலும் நிற்கும்.
2019ஆம் ஆண்டுக்கு பிறகு ஓசிபிசி சைக்கிள் பந்தயத்தில் அனைத்து ரக போட்டிகளும் முதல் முறையாக இவ்வாண்டு நடக்கிறது. 7,000-க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொள்ளவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓசிபிசி சைக்கிள் பந்தயங்கள் 2009ஆம் ஆண்டு முதல் நடந்துவருகிறது.