பிரெஞ்சு விண்வெளித்துறை நிறுவனமான 'தாலஸ்' புதிய மின்னியல் ஆய்வுக்கூடத்தைச் சிங்கப்பூரில் திறந்துள்ளது. சிங்கப்பூரில் ஏற்கெனவே பல ஆராய்ச்சிக் கூடங்களைத் திறந் துள்ள இந்நிறுவனம், புதிய மின் னியல் கூடம்வழி உயர் தொழில் நுட்பம் அடிப்படையிலான தரவு தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
இது உள்நாட்டு நிபுணத்துவத் தைப் பயன்படுத்தி உருவாக்கப் படும். நேற்று திறக்கப்பட்ட இந்த ஆய்வுக்கூடம் அடுத்தாண்டு சிங்கப்பூரர்கள் உள்பட பலநாட் டினரையும் உள்ளடக்கிய 30 நிபுணர்கள் கொண்ட குழுவாக இயங்கவிருக்கிறது. வட்டார நாடுகளில் உள்ள தரவு விஞ்ஞானிகள், மென் பொருள் பொறியாளர்கள், வடி வமைப்பாளர்கள், இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் ஆகியோரை ஈர்க்க நிறுவனம் எண்ணியுள்ளது.

