வசதி குறைந்த நோயாளிகள் உதவி நாடுவது அதிகரிப்பு

1 mins read

வசதிகுறைந்த சிங்கப்பூரர்கள் 'மெடிஃபண்டு' எனப்படும் மருத் துவ அறக்கட்டளை நிதியிலி ருந்து 2017ஆம் நிதியாண்டில் $150 மில்லியன் உதவித்தொகை பெற்றதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. அரசாங்க கட்டணச் சலுகை கள், 'மெடி‌ஷீல்டு லைஃப்', 'மெடிசேவ்' ஆகிய திட்டங்களால் பலனடைய முடியாத நிலையில் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு 'மெடிஃபண்டு' உதவுகிறது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவர்கள் ஒவ் வொருவருக்கும் சராசரியாக $953 வழங்கப்பட்டதாகவும் வெளிநோயாளி சிகிச்சை பெற்ற ஒவ்வொருவருக்கும் சராசரியாக $85 தரப்பட்டதாகவும் இதன்வழி தெரிகிறது.

பணவசதி இல்லாத ஒரே காரணத்தால் எந்த ஒரு சிங்கப்பூரருக்கும் சரியான மருத் துவப் பராமரிப்பு கிடைக்காமல் போகக்கூடாது என்பதை 'மெடிஃபண்டு' உறுதி செய் வதாக சுகாதார அமைச்சு கூறி உள்ளது. இதில் நீண்டகால பராமரிப்பு தேவைப்படுவோருக்குக் கூடுதல் நிதி உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.