மோசடிகளை முறியடிக்க அதிகமான திறனாளர்கள் தேவை

மோசடிகளை முறியடிக்க அதிகமான திறனாளர்கள் தேவை

2 mins read

பண மோசடி, பயங்கரவாதத்திற்கு நிதி அளித்தல் ஆகியவற்றிற்கு எதிராக தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் பயன்படுத்தி வரு கிறது. ஆனால், சட்டவிரோத பணப் புழக்கத்திற்கு எதிரான இப்போராட் டத்தில் போதுமான திறன் வாய்ந்த தரவு ஆய்வாளர்கள் இல்லை. இந்நிலையைச் சமாளிக்க வெளிநாட்டுத் திறனாளிகளை வர வழைப்பதுடன் சிங்கப்பூரர்களுக் கும் பயிற்சி அளிக்கப்படலாம் என்று வங்கிகள், நிதிக் கட்டுப் பாட்டு அமைப்பு, போலிஸ் ஆகியவை நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டன. தரவு பகுப்பாய்வுகளைப் பயன் படுத்திச் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளைக் கண்டுபிடிக் கும் சாத்தியத்தைக் கடன் நிறு வனங்கள் ஆராய்ந்து வருகின் றன.

தற்போதுள்ள கட்டமைப்பு களில் அதிக அளவிலான போலி எச்சரிக்கைகள் அமைந்திருப்ப துடன் மனிதத் தவறுகள் எளிதில் நிகழக்கூடிய செயல்முறைகளும் உள்ளதாக அறிக்கை தெரிவித்து உள்ளது. இதன் தொடர்பில் சென்ற ஆண்டு பண மோசடி, பயங்கர வாதத்திற்கு நிதியளித்தல் போன்றவைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பணிக்குழு ஒன்று உருவாக்கப் பட்டது. வங்கிகளை உள்ளடக்கும் இப் பணிக்குழுவை சிங்கப்பூர் நாணய ஆணையம், வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு, சிங்கப்பூர் போலிஸ் படையின் தொழில்சார் குற்றப் பிரிவு ஆகியவை இணைந்து வழிநடத்தி வருகின் றன. அதிகமான வெளிநாட்டு ஊழியர்களின் வருகை குறித்து சிங்கப்பூரர்கள் கவலை தெரிவித் ததைத் தொடர்ந்து 2011 தேர்தலுக் குப்பின் வெளிநாட்டவர் குடி நுழைவுக்கான கொள்கை கடுமை ஆக்கப்பட்டது. ஆனால், தற்போதுள்ள நிலை யில் நிதித் தொடர்பான தொழில் நுட்பத்துறையிலும் மற்ற பல துறைகளிலும் திறன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டுத் திறனாளிகளை அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.