உலக அரங்கில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் அழகிக்கான தேசிய ஆடையாக ட்ரம்ப் = கிம் சந்திப்பைப் பிரதி பலிக்கும் தேசிய ஆடை வடி வமைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் தலைநகர் பேங் காக் கில் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிர பஞ்ச அழகிப்போட்டியில் சிங்கப்பூர் சார்பாகக் கலந்துகொள்ளும் அழகி குமாரி ஸஹ்ரா கனும் இந்தப் புதிய தேசிய ஆடையை உடுத்தி பவனிவருவார். அந்தப் போட்டியை யொட்டி அங்கு நடை பெறவிருக்கும் பிர பஞ்ச அழகிகளுக்கான தேசிய ஆடை பவனி யில் குமாரி கனும் புதிய ஆடையுடன் மிளிர்வார். கடந்த ஜூன் மாதம் சிங்கப் பூரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வடகொரியா = அமெரிக்கா உச்சநிலைச்சந்திப்பில் எப்போதும் இல்லாத வகையில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் கலந்து கொண் டனர். அந்தச் சந்திப்பைப் பிரதிபலிக் கும் வகையில் இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகிப்போட்டிக் கான தேசிய ஆடை வடிவமைக் கப் பட்டு உள் ளது.
பிரபஞ்ச அழகிப்போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் சிங்கப்பூர் அழகி குமாரி ஸஹ்ரா கனும், டிரம்ப்=கிம் சந்திப்பைப் பிரதிபலிக்கும் தேசிய ஆடையை அணிந்து காட்சி தருகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

