அடுத்த ஆண்டு ஜூலை மாதம் மூன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறவிருக்கும் பத்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்க விரும்பும் அறிஞர் பெருமக்களுக்கும் ஆர்வலர்களுக்கும் ஒரு நற்செய்தி. ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம் சமர்ப்பிக்கப்படவேண்டிய இறுதிநாள் 30.11.2018 என்று முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இறுதிநாள் 15.12.2018 வரை நீட்டிக்கப் பட்டிருக்கிறது. இம்மாநாடு தொடர்பாக மேலும் தகவல் பெற விரும்புவோர் www.iatrnew.org மற்றும் https:// www.icsts10.org ஆகிய இணையத்தளங்களின் உதவியை நாடலாம்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: சமர்ப்பிப்பு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது
1 mins read

