புதிய வேலைகளுக்கு ஏற்ற சரியான திறன்களைக் கற்கவேண்டும்

புதிய வேலைகளுக்கு ஏற்ற சரியான திறன்களைக் கற்கவேண்டும்

1 mins read

புதிய வேலை வாய்ப்புகள் கூடிவர, அவற்றுக்குத் தேவைப்படும் திறன்களை வேலை தேடுவோர் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். வாய்ப்புகள் பற்றி புதிய தகவல்களை வழங்குவது, வேலை தேடி தரும் சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவது ஆகியவற்றின் வழி சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து வேலையைத் தேட பாடுபடும் என்று ஊழியரணி அமைப்பு தெரிவித்தது. MyCareersFuture.sg என்ற தனது வேலை வாய்ப்புத் தேடல் தளத்தை மேம்படுத்தவும் இந்த அமைப்பு உறுதி தெரிவித்தது. "வேலை தேடுபவர்கள், தாங்கள் விண்ணப்பிக்கும் புதிய வேலைகளுக்குத் தேவைப்படும் திறன் என்ன என்பதை அறிந்து கொண்டு அதனைப் பெறுவதில் முனைப்பாக இருக்கவேண்டும்," என்று ஊழியரணி அமைப்பு கூறியது.