தனது முதலாளியின் சிறு வயது மகனிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்ட ஒரு பணிப்பெண்ணுக்கு நவம்பர் மாதம் 22ஆம் தேதி 18 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தண்டனை விதிக்கப் பட்ட 33 வயதுள்ள பணிப்பெண் விவரங் களையும் சம்பந்தப்பட்ட சிறுவனின் விவரங்களையும் வெளியிட முடியாது. இந்தியாவைச் சேர்ந்த அந்தப் பணிப் பெண், 2015 ஜனவரி முதல் 2016 ஜூலை வரை அந்த முதலாளியின் வீட்டில் வேலை பார்த்து வந்தார். இந்தக் குற்றச்செயல்கள் இடம் பெற்றபோது அந்தப் பையனுக்கு வயது 11 முதல் 12 வரை. 2016 ஜனவரி முதல் தானும் அந்தப் பணிப்பெண்ணும் வீட்டில் தனியாக இருந்தபோதெல்லாம் பலமுறை அந்தப் பெண் தன்னை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்திக் கொண்டதாக வழக்கு விசாரணையின்போது சிறுவன் சாட்சியம் அளித்தான் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, தானும் அந்தச் சிறுவனும் பாலியல் காரியங்களில் ஈடுபட்டதைக் காட்டக்கூடிய ஒரு காணொளியை தான் வைத்திருப்பதாக அந்தச் சிறுவனிடம் தெரிவித்த பணிப்பெண், நடந்ததை வெளியில் சொன்னால் அந்தக் காணொ ளியைக் காட்டி சிறுவனை மாட்டிவிடப் போவதாக அந்தப் பையனை மிரட்டிவந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அத்தகைய காணொளி ஒன்று அந்தப் பணிப்பெண்ணிடம் இருந்ததா என்பது தெரியவில்லை. 2016 ஜூலை 11 ஆம் தேதி அந்தச் சிறுவன் தன் தந்தையை அழைத்து பணிப்பெண் தன்னை அடிக்க வருவதாகக் கூறினான். தந்தை வீட்டுக்குத் திரும்பியதும் எதுவுமே நடக்கவில்லை என்று கூறி அவரை பணிப்பெண் அமைதிப்படுத் தினார். பிறகு அந்தப் பெண், "உங்கள் மகன் செய்த காரியம் தெரியுமா," என்று முதலாளியிடம் சொன்னார்.
அதைக் கேட்டதுமே பையன் மௌனமாகிவிட்டான். ஏதோ நடந்து இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட தந்தை, மகனை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று விவரம் கேட்டார். சிறுவன் அழுதுகொண்டே பணிப்பெண் செய்த காரியங்களை எல்லாம் தந்தை யிடம் கூறினான். ஐந்து நாள் கழித்து போலிசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்குப் பிணை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாது தான் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டதையும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரு டைய வழக்கறிஞர்களில் ஒருவர் தெரி வித்துள்ளார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

