நிலவனப்பு பராமரிப்பு ஊழியர் களுக்குச் சம்பள உயர்வு கிடைக்க விருக்கிறது. தங்கள் முதலாளி யிடம் ஓராண்டு காலம் வேலை பார்த்திருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு வார கால போனஸ் கிடைக்கும். இந்தத் தொழில்துறையில் உள்ள நிறுவனங்கள், தங்களிடம் வேலைபார்க்கும் சிங்கப்பூர் குடி மக்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக் கான குறைந்தபட்ச ஊதியத்தை 2020ல் $150 கூட்ட வேண்டும். 2021 மற்றும் 2022ல் ஆண் டுக்கு $100 என்ற கணக்கில் ஊதியத்தை உயர்த்த வேண்டும்.
அதற்குப் பிறகு மூன்றாண்டு காலத்திற்கு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 3% சம்பள உயர்வு வழங்க வேண்டும். என்றாலும் இது பரிசீல னைக்கு உட்பட்டதாக இருக்கும். இத்தொழில்துறை ஊழியர் களுக்கு படிப்படியான சம்பள உயர்வு முறையை மேம்படுத்துவதற் கான இந்தப் புதிய பரிந்துரைகளை நேற்று நிலவனப்பு தொழில்துறை முத்தரப்புக் குழுமம் அறிவித்தது. பரிந்துரைகளை அரசாங்கமும் நேற்றே ஏற்றுக்கொண்டது. இந்தத் தொழில்துறையில் 3,000 பேர் வேலை பார்க்கிறார்கள். ஏறுமுக சம்பள முறைப்படி பல்வேறு நிலையிலான வேலைகளுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக் கப்படுகிறது.
நிலவனப்பு நிறுவன ஊழியர் ஒருவர் தாவரங்களை கத்தரித்து அழகு படுத்துகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

