மழைக்காலம் நெருங்கி வருவதால் கடும் மழை காரணமாக ஏற்படும் வெள்ளப்பெருக்குக்குத் தயாராகும் வகையில் சுமார் 600 குடியிருப் பாளர்களுக்கும் வர்த்தகங்களுக் கும் பொதுப் பயனீட்டுக் கழகம் மணல் மூட்டைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "பருவநிலை மாற்றத்தால் ஏற் பட்டுள்ள தற்போதைய கணிக்க முடியாத வானிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் மழைக் காலத்திற்குச் சமூகத்தைத் தயார்ப் படுத்துவதற்கு கழகம் தனது முயற்சிகளை அதிகமாக்கி உள் ளது என்று அதன் நீர்ப்பிடிப்பு மற் றும் நீர்நிலைகள் பிரிவின் இயக் குநர் திரு இயோ கெங் சூன்.
"வெள்ளம் ஏற்படும் பகுதிக ளில் உள்ள குடியிருப்பாளர்களும் வர்த்தகங்களும் வெள்ளத்தின் போது கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பதில் உதவும் பொருட்டு, கழ கம் மணல் மூட்டைகளைக் கொடுத்து உதவுகிறது என்றும் திரு இயோ கூறினார். திடீர் வெள்ளத்தின்போது வாகனமோட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை களைத் தெரிவிக்க கழகம், சிங் கப்பூர் வாகன உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து பணியாற்றும். "திடீர் வெள்ளத்தின்போது, ஒரு சில நிமிடங்களுக்குள் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும். சாலையோர மேடை வெள்ளநீரில் மறைக்கப்பட்டிருந் தால், வெள்ளநீர் சூழ்ந்திருக்கும் அந்தப் பகுதிக்குள் வாகன மோட் டிகள் செல்ல வேண்டாம் என்றும் அப்படி சென்றால் ஒரு வேளை வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளக்கூடும் என்றும் பாது காப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கழகத்தின் அறிக்கை தெரி வித்தது. இதைத் தவிர, பொதுப் பயனீட்டுக் கழகம் முக்கிய இடங் களிலும் கட்டுமானத் தளங் களிலும் உள்ள வடிகால்களில் வழக்கமான சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.
கடந்த மாதம் 11ஆம் தேதி கனத்த மழை பெய்ததால் சிங்கப்பூரின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

