மூன்று சட்டவிரோத மருந்துப் பொருட்களுக்கு எதிராக எச்சரிக்கை

மூன்று சட்டவிரோத மருந்துப் பொருட்களுக்கு எதிராக எச்சரிக்கை

1 mins read
dca97219-74c1-4a41-a94e-f429bda1d42a
-

தனது மூட்டுவலியை தீர்ப்பதற்காக 70 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் 'பில் ராஜா உராட் அஸ்லி' என்ற மருந்தை உட்கொண்டதை அடுத்து 'கு‌ஷிங்ஸ் சின்ட்ரம்' என்ற நோய்க்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுகாதார அறிவியல் ஆணையம், இந்த மருந்திற்கும் மற்ற இரண்டு மருந்துப் பொருட்களுக்கும் எதிரான எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடையைக் குறைப்பதற்காக உட்கொள்ளப்படும் 'எக்ஸ்எக்ஸ்எக்ஸ்', 'பெஸ்ட் நியூட்ரி‌ஷியன் புரொடக்ஸ் டையபொட்டிக்கா' ஆகியவை மற்ற இரண்டு மருந்து பொருட்கள். மூன்று பொருட்களுமே தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருட்களைக் கொண்டிருப்பதாக ஆணையம் கூறியது. இந்த மருந்துப் பொருட்களைக் கடைகளிலிருந்து மீட்கும் பணியைத் தொடங்கியுள்ள ஆணையம், இணையத்தளங்களில் இவற்றின் விற்பனையை நிறுத்த இணையத்தளங்களிடம் கூறியுள்ளது.