உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின்போது லண்டனில் மருத்துவ வாகனத்தைச் சேதப் படுத்திய சிங்கப்பூரர் ஒருவர் மீது கடந்த வியாழக்கிழமை லண்டன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட் டது. கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து சுவீட னைத் தோற்கடித்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் ஜியன் காங்யு எனும் 26 வயது சிங்கப் பூரர், இரண்டு இங்கிலாந்து ஆட வர்கள், ஒரு ஸ்காட்லாந்து பெண் ஆகியோர் அங்கிருந்த மருத்துவ வாகனத்தின் முன்புறக் கண் ணாடியை உடைத்தும் வாகனத் தின் முன்பகுதியையும் உடைத் தும் சேதப்படுத்தியதாகவும் கூறப் பட்டது. ஸ்காட் டென்னட், 25, ஜேம்ஸ் எல்டன், 27, லரிசா பெல், 21 ஆகியோரே மற்ற மூவர். அவர்கள் நால்வரும் சேர்ந்து 6,867.42 பிரிட்ஷ் பவுண்ட்ஸ் ($12,007) மதிப்புள்ள சேதத்தை ஏற்படுத்தியதாகவும் அதனால் அந்த மருத்துவ வாகனத்தை 34 நாட்களுக்குப் பயன்படுத்த முடி யாமல் போனது என்றும் தெரிவிக் கப்பட்டது.
பெல்லும் டென்னட்டும் தங் கள் குற்றச்சாட்டுகளுக்கு எதி ரான மனுவைச் சமர்ப்பிப்பது பற்றி தெரிவிக்கவில்லை என்றும் ஜியானும் எல்டனும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும் மனு வைச் சமர்ப்பித்திருக்கிறார்கள் என்றும் 'தி டெய்லி மெயில்' நாளிதழ் கூறியது. நால்வரும் பிணையில் விடு விக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீண்டும் அடுத்த மாதம் 8ஆம் தேதி இன்னர் லண்டன் கிராவுன் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட் டால் அவர்களுக்கு சிறைத் தண் டனை விதிக்கப்படலாம்.

