குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் வியாழக் கிழமை அன்று இரு வேறு சம்ப வங்களில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கைப்பற்றினர். முதல் சம்பவத்தில் 1,000க்கும் மேற்பட்ட பெட்டிகளில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மாலை 5.45 மணியளவில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அதிகாரிகள், சரக்குகள் ஏதும் இல்லை என்று கூறப்பட்ட மலேசி யாவில் பதிவான லாரியின் நுட் பச் சோதனைப் படங்களில் முரண்பாடுகள் இருந்ததைக் கண்டனர்.
பின்னர், சிங்கப்பூருக்குள் வந்துகொண்டிருந்த அந்த லாரி யைச் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் அதில் 961 பெட்டிகள், 117 பைகள் நிறைய வரி செலுத்தப்படாத சிகரெட்டு கள் இருந்ததைக் கண்டுபிடித் தனர். சிகரெட்டுகள் லாரியின் உட் கூரைப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு சம்பவத்தில் இரவு 7.15 மணிக்கு, 119 பெட்டிகள், 298 பைகள் நிறைய வரி செலுத் தப்படாத சிகரெட்டுகள் கைப்பற் றப்பட்டன. இவை மலேசியாவில் பதி வான கார் ஒன்றின் பின்புறக் கீழ்ப்பகுதியிலும் கதவுப் பகுதி யிலும் மறைத்து வைக்கப்பட்டி ருந்தன. லாரியைப் போல அந்த காரும் சிங்கப்பூருக்குள் வந்து கொண் டிருந்தது. இரு சம்பவங்கள் குறித்தும் சிங்கப்பூர் சுங்கத்துறை விசா ரணை மேற்கொண்டுள்ளது.

