கிராபி காவல் அதிகாரி மீது காரை மோதிய சிங்கப்பூரர் கைது

கிராபி காவல் அதிகாரி மீது காரை மோதிய சிங்கப்பூரர் கைது

2 mins read
8041dc38-6a03-4aee-8763-5903f6706dec
-

தாய்லாந்தின் கிராபி நகரில் வேகக் கட்டுப்பாட்டுச் சோதனைச் சாவடியின் காவல் அதிகாரி மீது சிங்கப்பூரர் ஒருவர் தம் 'போர்ஷே' காரை கொண்டு மோதியதற்காக கைது செய்யப் பட்டுள்ளார். வியாழக்கிழமை காலை நடந்த இவ்விபத்தில் 65 வயதான சைமன் ஒங் சின் சிம் காரின் கட்டுப்பாட்டை இழந்ததாக தாய் லாந்து நாளிதழான 'தி நேஷன்' தெரிவித்தது. விபத்தின்போது காரின் இடது சக்கரம் அங்கு போக்கு வரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி மீது மோதியது. அதிகாரிக்கு இடுப்பு, கால் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக் காகக் கொண்டு செல்லப்பட்டார். புக்கெட்டிலிருந்து கிராபிக்கு மொத்தம் ஐவர் தங்களின் 'போர்ஷே' கார்களை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றதாகவும் வேகக் கட்டுப்பாட்டுச் சோதனைச் சாவ டிக்கு இட்டுச் செல்லும் விரைவுச் சாலையில் அவர்கள் அதிவேகத் தில் வாகனங்களை ஓட்டியதாக வும் அந்த நாளிதழ் தெரிவித்தது.

சோதனைச்சாவடியை நெருங் கிய முதல் 'போர்ஷே' ஓட்டுநர், தம் காரின் வேகத்தைக் குறைக்க, அவர் பின்னால் வந்த மற்ற நான்கு 'போர்ஷே' ஓட்டுநர் களும் திடீரென 'பிரேக்' போட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வரிசையில் மூன்றாவது 'போர்ஷே' காரில் இருந்த திரு சைமன், முன்னால் இருந்த காரை இடிக்காமல் இருக்க இடது பக்கம் வாகனத்தைத் திருப்ப முயன்றபோது, அது அதிகாரி மீது மோதியது எனக் கூறப்படுகிறது.

இதுதான் போக்குவரத்து காவல் அதிகாரியை மோதிய சிங்கப்பூரர் ஒட்டிய 'போர்ஷே' கார். படம்: தாய்கெர் கிராபி