வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவ தொண்டூழியர் கூட்டணி

வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவ தொண்டூழியர் கூட்டணி

2 mins read
c1a885fa-ebde-41a7-b659-d8dc5b5b7ad6
-

வசதி குறைந்த 1,700 குடும்பங்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் உதவுவதற்காக 'என்டியுசி'யின் இளையர் பிரிவு, இயோ சூ காங் அடித்தள அமைப்பு ஆகியவற்றின் தொண்டூழியர்கள் ஒன்றிணைந்து உள்ளனர். தொண்டூழியர்கள் சேர்ந்து சுமார் $80,000 மதிப்புள்ள நிதி யையும் உணவுப் பொருட்களை யும் திரட்டி இயோ சூ காங் வட்டாரத்தில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கும் முதியோருக்கும் கைகொடுத்து உதவினர். இதன் தொடர்பிலான ஒரு திட்டத்தில் 'பசார் ஃபியெஸ்டா' என்ற தற்காலிகப் பேரங்காடிக் கடைகள் திறக்கப்பட்டன. இயோ சூ காங் வட்டாரத்தில் வசிக்கும் வசதி குறைந்த குடியிருப்பாளர்கள் தங்கள் மாதாந் தரச் செலவுகளைச் சமாளிக்க இப்பேரங்காடிகள் உதவும் என்று கூறப்படுகிறது.

வட்டாரத்தின் ஐந்து இடங் களில் அமைந்திருக்கும் இப்பேரங் காடிக் கடைகளைத் தொண்டூழியர் கள் நிர்வகித்து வருகிறார்கள். வசதி குறைந்த குடியிருப்பாளர் களுக்குத் தள்ளுவண்டிப் பைகள் வழங்கப்படும். அவர்கள் கடைகளை வலம் வந்து பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். இதன் தொடர்பில் தொழிலாளர் இயக்கங்கள், சமூகப் பங்காளி களுடன் கூட்டணி அமைத்து வசதி குறைந்த குடியிருப்பாளர்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வருவது தமக்கு உற்சாகம் அளிப்பதாக இயோ சூ காங் அடித்தள அமைப்புகளின் ஆலோசகரும் என்டியுசியின் துணைத் தலைமைச் செயலாள ருமான டாக்டர் கோ போ கூன் கூறினார். இளையர்கள் சமூகத்திற்குப் பங்காற்ற இதுபோன்ற திட்டங்கள் உதவுவதாகவும் இதனால் இளையர்களிடையே பரிவுமிக்க ஒரு கலாசாரத்தை ஏற்படுத்த முடியும் என்றும் என்டியுசியின் உதவித் தலைமைச் செயலாளர் திரு டெஸ்மண்ட் சூ குறிப்பிட்டார்.