குடும்பத்தில் உள்ள மூத்த குடி மக்களைப் பராமரிப்பவர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்குவது தொடர்பில் மூன்று புதிய திட்டங் களை தென்மேற்கு சமூக மேம் பாட்டு மன்றத்தின் மேயர் லொ யென் லிங் நேற்று அறிவித்தார். மூப்படையும் சமுதாயத்தில் சிறிய குடும்பங்கள் அதிகமுள்ள இப்போதைய காலகட்டத்தில் குடும்பத்தின் மூத்தோரைப் பரா மரிப்பவர்களுக்கு மன்றத்தின் இத்திட்டங்கள் கைகொடுக்கும். 'தென்மேற்கு பராமரிப்பாளர் ஆதரவு நிதி' அத்திட்டங்களில் ஒன்றாகும். மருத்துவ சாதனங் கள், மருத்துவரைக் காண்பதற்கான போக்குவரத்துக் செலவுகள், ஆலோசனை மற்றும் பராமரிப்புக்கான பயிற்சி பெறுதல் போன்றவற் றால் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க $500 இடைக்கால நிதி உதவியைப் பராமரிப்பாளர்கள் பெறலாம். நீடித்த காலத்திற்கு உதவி தேவைப்படும் சூழல்களில் கைகொடுப்பதற்கென ஏற்கெனவே நடப்பில் உள்ள தேசிய திட்டங் களுக்கு இது ஒரு துணைத்திட் டமாக விளங்குகிறது. இதற்கு முதல் படியாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 300 பரா மரிப்பாளர்களுக்கென மொத்தம் $150,000 ஒதுக்கி வைக்கப்பட உள்ளது.
தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் மேயர் திருவாட்டி லொ யென் லிங்கும் (இடது), சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கும் முதியோர் பராமரிப்பு தொடர்பில் மூன்று புதிய திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

