அடுத்த இரு வாரங்களுக்கு மழை

அடுத்த இரு வாரங்களுக்கு மழை

1 mins read

இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கு மழை தொடர்ந்து பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நேற்று முன்தினம் வானிலை அறிக்கை தெரிவித்தது. வட-கிழக்கு பருவமழைக் காலம் சிங்கப்பூரையும் அதைச் சுற்றியுள்ள வட்டாரத்தையும் முற்றுகையிட்டுள்ளதாகவும் இது அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கூறியது. இந்த இரு வாரங் களில் சில நாட்கள் பகல் நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான நாட் களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியசுக்கும் 32 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும்.