திருட்டுக் கடன் அட்டை: இரு பெண்கள் கைது

திருட்டுக் கடன் அட்டை: இரு பெண்கள் கைது

1 mins read
0fee7694-9157-43ac-899f-25271dc33727
-

திருடப்பட்ட கடன் அட்டையைப் பயன்படுத்தி $1,300க்கு அதிகமான மதிப்பு கொண்ட பொருட்களை வாங்கியதன் பேரில் இரண்டு பெண்களைப் போலிசார் கைது செய்துள்ளனர். கைதான இருவரில் ஒருவருக்கு 29 வயது; மற்றொருவருக்கு 37 வயது. கடன் அட்டையைத் தொலைத்த உரிமையாளர், அது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை போலிசாரிடம் புகார் கொடுத்ததை அடுத்து இவ்விருவர் கைதாகினர். உணவுப் பொட்டலங்கள், குளிர்பானம், ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை இந்தப் பெண்கள் கடன் அட்டையைக் கொண்டு வாங்கியதாகத் தெரிய வந்தது. இவர்கள் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்கள் 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதத்தையும் எதிர்நோக்கலாம்.