கம்போங் அட்மிரல்டிக்கு தலைசிறந்த விருது

1 mins read
552203f5-c693-44b2-a81a-122a073aa157
-

'கம்போங் அட்மிரல்டி' குடியிருப்புக் கட்டடத்திற்கு இந்த ஆண்டின் உலகக் கட்டடக் கலைஞர் விழாவில் '20018ஆம் ஆண்டுக் கான கட்டடம்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டடக் கலைக்கான ஆக உயரிய விருதாக இது உள்ளது. 57 நாடுகளைச் சேர்ந்த 535 கட்டடங்களுக்கு இடையிலான இந்தப் போட்டியில் 'வோஹா ஆர்க்கிட்டெக்ஸ்' கட்டடக்கலை நிறுவனம் வடிவமைத்திருந்த 'கம்போங் அட்மிரல்ட்டி' வாகை சூடியது. ஆம்ஸ்டர்டாம் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதற்கான வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

இதே கட்டடம், 'தலைசிறந்த வர்த்தக கலப்புப் பயன் வருங்காலத் திட்டம்' என்ற விருதை 2016ஆம் ஆண்டு பெற்றது. 11 மாடிகளைக் கொண்ட 'கம்போங் அட்மிரல்ட்டி', குழந்தை பராமரிப்பு நிலையங்களையும் முதி யோருக்கான நிலையங்களையும் ஒருங்கிணைக்கும் முதல் வீட மைப்பு வளர்ச்சிக் கழக குடியி ருப்புத் திட்டமாக உள்ளது. வெவ்வேறு தலைமுறையினருக்கு இடையே பிணைப்பை உருவாக் குவது இதன் நோக்கம் என்று மே மாதத்தில் கட்டடம் திறக்கப் பட்டபோது 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது.

676 உட்லண்ட்ஸ் டிரைவ் 71ல் அமைந்துள்ள 'கம்போங் அட்மிரல்டி' கட்டடம் தலைசிறந்த கட்டடக்கலை விருதைப் பெற்றுள்ளது. இந்தக் கட்டடத்திற்கு 11 மாடிகள் உள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்