நீரிறைப்பு கருவியை திருடியவர்கள் கைது

நீரிறைப்பு கருவியை திருடியவர்கள் கைது

1 mins read

மீன் தொட்டி கடையிலிருந்து தண்ணீரை இறைக்கும் கருவியைத் திருடியதற்காக இருவர் கைது செய்யப்பட்டனர். நான்கு சாகோ லேனிலுள்ள கடையிலிருந்து அதைத் திருடிச் சென்ற 27 வயது ஆடவரும் 25 வயது பெண்ணும், அதே நாளிலே கடைக்கு மீண்டும் திரும்பியபோது கைதுசெய்யப்பட்டதாகப் போலிசார் தெரிவித்தனர். நீர் இறைக்கும் கருவியின் மதிப்பு 12 வெள்ளி. கடையின் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காணொளி வழியாக அவர்களது அடையாளம் உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் போதைப்பொருள் உட்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் இருந்ததையும் போலிசார் கண்டனர்.