புக்கிட் தீமா விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணம்

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணம்

1 mins read

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் காருக்கும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் இடையிலான விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவர் உயிரிழந்தார். உட்லண்ட்ஸ் அவென்யூ 3 வெளிச்சாலைக்கு அருகே நடந்த இந்தச் சம்பவம் குறித்த தகவல் பிற்பகல் 1.45 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். 40 வயது ஓட்டுநர் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோதும் பின்னர் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி சிராய்ப்புக் காயங்களுடன் உயிர் தப்பினார். கார் ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. இறந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுநர், வாகனத்தின் பின்னே மோதி விபத்துக்குள்ளானதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது. சம்பவத்தை போலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.