லாட்டரி மோசடி குறித்து போலிஸ் ஆலோசனை

லாட்டரி மோசடி குறித்து போலிஸ் ஆலோசனை

1 mins read
ad429800-204e-4e24-b027-3a39e1329869
-

லாட்டரி மோசடி தொடர்பில் இந்த ஆண்டு ஜனவரிக்கும் அக்டோ பருக்கும் இடையில் போலிசாருக்கு 13 புகார்கள் வந்திருக்கின்றன. அந்த மோசடி காரியங்களில் பலரும் மொத்தம் சுமார் $366,000 ஏமாற்றப்பட்டதாக போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. ஃபேஸ்புக் முதலான சமூக ஊடகங்கள் வழி அப்பாவிகளுடன் தொடர்புகொண்டு அவர்களுக்குப் பரிசு கிடைக்க வழி இருப்பதாகக் கூறி தில்லுமுல்லு பேர்வழிகள் கைவரிசைக் காட்டுகிறார்கள். அத்தகைய மோசடி பேர்வழி களின் வலையில் விழவேண்டாம் என்றும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளும்படியும் போலிஸ் பொது மக்களுக்கு ஆலோசனை கூறி இருக்கிறது.