நான்காம் தலைமுறைத் தலைவர் கள் சிங்கப்பூரர்களுடனான தங்க ளுடைய கலந்துரையாடல் கூட்டத் தொடர்களை அடுத்த ஆண்டு வரவுசெலவுத்திட்ட தாக்கலுக்குப் பிறகு தொடங்குவார்கள் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் அறிவித்தார்.
வெவ்வேறான குழுக்களைச் சேர்ந்த மக்களுடனான இந்தக் கலந்துரையாடல் தொடர், 2013ல் தொடங்கப்பட்ட 'நமது சிங்கப்பூர் கலந்துரையாடல்' என்ற தேசிய கருத்தறியும் இயக்கத்திற்கு இன் னும் பலம் சேர்ப்பதாக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். ஒரு நாடு என்ற முறையிலும் ஒரு சமூகம் என்ற முறையிலும் தீர்வு காணப்படவேண்டிய அடிப் படையான, நீண்டகாலப் பிரச்சினை கள் எவை என்பதை ஆராய இன் னும் காலஅவகாசம் தேவைப்படு வதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்களுடனான கலந்துரை யாடல் தொடர் பற்றி இந்த ஆண்டு மே மாதம் முதல் தடவையாக அறி விக்கப்பட்டது.
பிரதமர் லீ சியன் லூங், வெளி யுறவு அமைச்சர் விவியன் பால கிருஷ்ணன் ஆகியோருடன் அர்ஜெண்டினாவில் ஜி20 மாநாட் டில் கலந்துகொண்ட அமைச்சர், அந்த மாநாட்டின் முடிவில் சிங்கப் பூர் ஊடகத்திடம் பேசினார். அப் போது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
மக்கள் செயல் கட்சியின் நான் காம் தலைமுறை அமைச்சர்கள், சென்ற மாதம் திரு ஹெங்கை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத் தனர். இதன் மூலம் திரு ஹெங், சிங்கப்பூரின் நான்காவது பிரத மராகப் பொறுப்பேற்க இருக்கிறார். தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட திரு ஹெங், துணைத் தலைவராக இருக்கும்படி வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுங் சிங்கை கேட்டுக்கொண்டார்.

