சிங்கப்பூரில் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராபிள்ஸ் தரையிறங்கி 200 ஆண்டுகள் ஆவதை நினைவு கூரும் வகையில் அடுத்த ஆண் டில் பல நடவடிக்கைகளுக்கு ஏற் பாடு செய்யப்படுகின்றன. 200வது ஆண்டுவிழா கொண் டாட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் சிங்கப்பூர் பைசென்டினியல் என்ற அமைப்பு, அந்த விழாவிற்கான சின்னத்தை வெளியிட்டு இருக் கிறது. இந்தச் சின்னம் கடந்த 200 ஆண்டுகளில் மட்டுமின்றி 700 ஆண்டு காலமாக சிங்கப்பூர் பெற்று வந்துள்ள பரிணாம வளர்ச் சியைச் சித்தரிப்பதாக இருக்கிறது. சின்னத்தில் சிவப்பு நிறத்தில் பல வடிவ வளையங்கள் காணப்படு கின்றன. அந்த வளையம் ஒவ் வொன்றும் ஒரு நூற்றாண்டைக் குறிக்கும். மொத்தமாக அவை சிங்கப்பூரின் 700 ஆண்டுகால வரலாற்றைச் சித்திரிக்கும்.
இந்தப் பல வடிவ வளையங்கள் ஒரு வட்டத்தை ஏற்படுத்துகின்றன. கால ஓட்டத்தில் சிங்கப்பூர் பரி ணாம வளர்ச்சி அடைந்து இப்போ தைய நிலையை அடைந்திருப்பதை அந்த வட்டம் சித்திரிப்பதாக சிங்கப்பூர் பைசென்டினியல் அலு வலகம், ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. மாற்றத்தையும் தொடர்ச்சியை யும் வெளிப்படுத்தும் வகையில் புதிய சின்னம் வடிவமைக்கப்பட்ட தாக அது கூறியது. சிறப்பான நிலையை எட்டு வதற்கு எப்போதுமே நமது பயணம் பரிணமித்து வரும் என்ற உணர்வை எடுத்துக்காட்டுவதாக வும் புதிய சின்னம் திகழ்கிறது.
ராபிள்ஸ் சிங்கப்பூருக்கு வருவ தற்கு முந்தைய நமது வரலாற்றைச் சித்தரிப் பதற்கான வாய்ப்பையும் இக்கொண்டாட்டம் வழங்குகிறது. அதோடு, பூகோள ரீதியில் கேந்திர முக்கியமான இடத்தில் அமைந்து உள்ள சிங்கப்பூர், சீரிய தன்மை களுடன் கூடிய மக்களைக் கொண்ட ஒரு நாடாக பரிண மித்தது எப்படி என்பதையும் இந்தக் கொண்டாட்டம் வெளிப் படுத்தும்.
200 ஆண்டுகால நினைவு விழாவை ஒட்டி 2019 முழுவதும் பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். முடிவாக ஃபோர்ட் கேனிங் சென்டரில் பெரிய கண் காட்சி ஒன்று நடைபெறும்.
சிங்கப்பூரின் 200வது ஆண்டு நினைவுக் கொண்டாட்டத்துக் கான சின்னம். படம்: ஃபேஸ்புக்/ சிங்கப்பூர் பைசென்டினியல்

