$10 மில்லியன் மோசடியில் நிறுவனத்தை ஏமாற்றிய உதவி நிர்வாகிக்குச் சிறை

$10 மில்லியன் மோசடியில் நிறுவனத்தை ஏமாற்றிய உதவி நிர்வாகிக்குச் சிறை

1 mins read

தாம் வேலை செய்த கட்டுமான சேவைகள் நிறுவனத்தை $10 மில்லியனுக்கு மேல் ஏமாற்றிய அதன் முன்னாள் உதவி நிர்வாகியான 30 வயது இங் ‌ஷு ஜுன்னுக்கு நேற்று மூன்று ஆண்டுகள் ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீது 17 மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. 2015ஆம் ஆண்டில் அதே நிறுவனத்தின் பணியாற்றிய இங்கின் தோழி லிண்டா லீ கொடுத்த பல்வேறு நிறுவனங் களின் அதிகாரத்துவ கடிதங்களில் செய்யப்படாத வேலை களுக்கு தமது 'யுஇ சர்வீஸ்கார்ப் சிங்கப்பூர்' நிறுவனத்திட மிருந்து பணத்தைப் பட்டுவாடா செய்தார். ஆனால் அந்தப் பணத்தை அவர்கள் இருவரும் பகிர்ந்துகொண்டனர். அவர்களின் மோசடிச் செயல்கள் எவ்வாறு கண்டுபிடிக் கப்பட்டன என்பதை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்க வில்லை. ஆனால் அவர்கள் இருவரையும் 'யுஇ சர்வீஸ்கார்ப் சிங்கப்பூர்' பணி நீக்கம் செய்தது. 40 வயது லீக்கு 12 ஆண்டு 6 மாதச் சிறையும் அவருக்கு உதவி செய்த 54 வயது திரு டான் ஐக் கீ என்பவருக்கு 11 ஆண்டு சிறை, $900,000 அபராதமும் ஏற்கெனவே விதிக்கப்பட்டுவிட்டது.