பேருந்து ஓட்டுநரின் முகத்தில் குத்திய ஆடவருக்குச் சிறையும் அபராதமும்

பேருந்து ஓட்டுநரின் முகத்தில் குத்திய ஆடவருக்குச் சிறையும் அபராதமும்

1 mins read

தாம் பேருந்தில் ஏறுவதற்கு முன் அதை நகர்த்தினார் என்ற காரணத்தால் பேருந்து ஒட்டுநரான 44 வயது திரு எங் மொக் சியாங்கின் முகத்தில் குத்திய 37 வயது கொண்டோமினிய நிர்வாகி 37 வயது திரு சான் யோங் ஹுயிக்கு நேற்று நான்கு வாரச் சிறையும் $2,000 அபராத மும் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி காலை 9 மணிக்கு காமன்வெல்த் அவென்யூ பேருந்து நிறுத்தத்தில் பேருந்து வந்து நின்றபோது சான் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். பேருந்து கிளம்பியபோதுதான் அது தான் ஏற வேண்டிய பேருந்து என்று உணர்ந்த சான் அதன் பின்னால் ஓடினார். பேருந்து நிறுத்தப்பட்டதும் ஓட்டுநர் எங்கின் முகத்தில் சான் குத்தினார்.