கள்ளக்குடியேறிகளுக்கு வேலை; ஆடவருக்கு சிறை

கள்ளக்குடியேறிகளுக்கு வேலை; ஆடவருக்கு சிறை

2 mins read
a7176e26-ff79-46d8-94be-e6db7bc08ee8
-

சட்டவிரோதமாக நாட்டில் தங்கி இருந்த இலங்கை நாட்டவர் நால்வரை உணவகங்களில் வேலைக்கு அமர்த்திய 46 வயது உத்திராபதி சரவணனுக்கு நேற்று நீதிமன்றத்தில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் நிரந்தரவாசியான உத்திராபதி கள்ளக்குடியேறி களான நான்கு இலங்கை நாட்டவரை வெவ்வேறு உண வகங்களில் தட்டு கழுவும் வேலைக்கு அமர்த்த ஏற்பாடு செய் திருந்தார். 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் இடைப் பட்ட காலகட்டத்தில் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் இந்த நான்கு ஆடவர்களையும் கைது செய்தது. இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு இவர் களை வேலைக்கு அமர்த்திய முதலாளியான உத்திராபதியை ஆணையத்தின் அதிகாரிகள் அடையாளம் கண்டனர். குடிநுழைவு தொடர்பில் குற் றம் புரிந்திருந்த நால்வரையும் தட்டு கழுவும் ஊழியர்களாக உணவகங்களுக்கு அனுப்பி இருந்ததன் தொடர்பில் உணவக உரிமையாளர்கள் விசாரணையில் உதவினர்.

இதன் தொடர்பில் சுத்தம் செய்யும் நிறுவன பிரதிநிதியாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட உத்திராபதியை உணவக உரிமையாளர்கள் அடையாளம் காட்டினர். தீவிர சோதனைகளுக்குப் பிறகு உத்திராபதியின் குற்றம் உறுதியானதும் அதிகாரிகள் 2015ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதியன்று அவரைக் கைது செய்தனர். இரு நாட்கள் கழித்து நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட உத்திராபதி தம்மீதான குற்றங்களை மறுத்து வழக்கு விசாரணை கோரினார். இதைத் தொடர்ந்து அவரது வழக்கு விசாரணை சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி இவ்வாண்டு ஜூலை மாதம் வரையில் நடத்தப்பட்டது.

கள்ளத்தனமாக நாட்டில் இருப்பவர்களுக்கு வேலை தரும் முதலாளிகள், வீட்டை வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்கள் ஆகியோருக்கு எதிராக ஆணையம் கடுமை யான நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்பில் சிங்கப்பூரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முதலாளி களுக்கும் வீட்டு உரிமையாளர் களுக்கும் பெரும் பங்கு உள்ள தாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இவர்கள் வேலைவாய்ப்பு களையும் தங்க இடவசதியையும் அளிக்காத நிலையில் கள்ளக் குடியேறிகளை ஈர்க்கும் நாடாக சிங்கப்பூர் அமையாது.