நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பொறியியல் துறை மாணவர்கள் மற்ற பலதுறைத் தொழிற்கல்லூரிகளை முந்திக்கொண்டு சாதனை படைத்துள்ளனர். முழுமையாக இயங்கக்கூடிய ஒரு விமானத்தை அடிப்படையிலிருந்து கட்டி முடித்துள்ளனர். இவ்விமானம் இனி வரும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும். 6.7 மீட்டர் நீளமுடைய இவ்விமானம் சிறிது தூரம் சென்ற உடனே பறக்கும், தரையிறங்கும் ஆற்றலுடையது. இதில் முழுமையாக இயங்கக்கூடிய இயந்திரம், அதிநவீன மின்னணுக்கள், கண்ணாடி விமானி அறை, ஒரு விமானி, ஒரு பயணிக்கென இருக்கைகள், பயணப்பெட்டிக்குரிய இடவசதி ஆகியவை அமைந்துள்ளன. படத்தில் விமானத்தை உருவாக்கிய குழுவின் நான்கு மாணவர்கள் தங்கள் விரிவுரையாளருடன் நிற்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான விமானம்
1 mins read
-

