அடுத்த ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவுக்கு பூஜா தலைமை வகிக்கிறார்

அடுத்த ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவுக்கு பூஜா தலைமை வகிக்கிறார்

1 mins read
85595391-bbde-49d6-a951-15b32d43ba10
-

அடுத்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி முடி வடையும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவுக்கு திருவாட்டி பூஜா நன்சி (படம்) தலைமை வகிப்பார் என்று தேசிய கலைகள் மன்றம் தெரிவித்துள்ளது. திருவாட்டி பூஜா, விழாவின் புதிய இயக்குநராகவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த ஆண்டு எழுத்தாளர் விழா நிகழ்ச்சிகள் 27,000 பேரை ஈர்த்தன. கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சிகளில் 25,500 பேர் கலந்துகொண்டனர்.

டிக்கெட் அனுமதி உள்ள நிகழ்ச்சிகளுக்கு இவ்வாண்டு 7,000 பேர் சென்றிருந்தனர். இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டு டிக்கெட் அனுமதி உள்ள நிகழ்ச்சிகளுக்கு 3,700 பேர் மட்டுமே வந்திருந்தனர். 2016ஆம் ஆண்டு தேசிய கலைகள் மன்றத்தின் இளம் கலைஞர் விருதை வென்ற திருவாட்டி பூஜா, நான்கு ஆண் டுகளாக விழா இயக்குநராகச் செயல்பட்ட திரு இயோ கை சாயிடமிருந்து அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார். (Photo: National Arts Council)