பிடோக் ரெசர்வார் வட்டாரத்தில் மொத்தம் 100 கொசு இனப்பெருக்க வாழ்விடங்கள் தேசிய சுற்றுப்புற வாரியத்தால் கண்டுபிடிக்கப்பட்டு ஒழிக்கப்பட்டதாக வாரியத்தின் பேச்சாளர் நேற்று முன்தினம் தெரி வித்தார். பிடோக்கில் டெங்கி சம்பவங் கள் ஏற்பட்ட பகுதியில் உள்ள 15 கட்டடங்களைச் சோதனையிட் டதில் இந்த வாழ்விடங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. நேற்று முன்தின நிலவரப்படி இவற்றில் 53 குடியிருப்பு வளாகங் களாகவும் 47 பொது வெளியிடங் களாகவும் இருந்தன. பிடோக் ரெசர்வார் வட்டா ரத்தை அக்டோபர் 13ஆம் தேதி யன்று கொசு இனப்பெருக்க பகுதி யாக அடையாளம் கண்டது முதல் கொசுக்களை ஒழிக்கும் பணியில் தேசிய சுற்றுப்புற வாரியம் ஈடுபட்டு வருகிறது.
வாரியத்தின் அதிகாரிகள் தொடர்ந்து இத்தகைய சோதனை களை மேற்கொள்வர் என்றும் கூறப்பட்டது. கொசுக்களை ஒழிக்கக் கட் டடக் கீழ்த்தளங்கள் போன்ற பொது இடங்களில் பூச்சிக்கொல்லி கள் அவ்வப்போது பயன்படுத்தப் படுவதாக வாரியம் தெரிவித்தது. இவ்வட்டாரத்தில் மொத்தம் 44 டெங்கி சம்பவங்கள் இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளன. கொசுக்கள் உட்புற இடங் களிலும் இருக்க வாய்ப்புள்ளதால் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அதிகாரிகள் பூச்சிக்கொல்லிகளை வீடுகளில் பயன்படுத்த அனுமதிக்குமாறு அமைப்பின் பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.
தீவு முழுவதும் தற்போது 17 கொசு இனப்பெருக்கப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் பிடோக் ரெசர்வார் வட்டாரம் முதலிடத்திலும் அத னைத் தொடர்ந்து 37 டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவான உட்லண்ட்ஸ் சர்க்கிள் இரண்டாம் இடத்திலும் உள்ளன. டிசம்பர் 1ஆம் தேதியுடன் முடி வடைந்த ஒரு வாரத்தில் தீவு முழு வதிலும் இருந்து 110 டெங்கி சம் பவங்கள் பதிவாகின. இது அதற்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் 13 சம்பவங்கள் அதிகம். இதன் தொடர்பில் ஒரு வாரத் தில் 100 டெங்கி சம்பவங் களுக்கு மேல் பதிவானது இவ்வாண்டில் இதுவே முதல் முறை என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.

