நவம்பரில் உயர்ந்த மறுவிற்பனை வீட்டு விலைகள்

நவம்பரில் உயர்ந்த மறுவிற்பனை வீட்டு விலைகள்

1 mins read
9a22cf02-f04a-4fab-9733-5d10e52858a8
-

வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலை சென்ற மாதம் 0.2% உயர்ந்ததாக எஸ்ஆர்எக்ஸ் சொத்து நிறுவனம் நேற்று தெரிவித்தது. குறிப்பாக வீவக எக்சிகியூட்டிவ் மறுவிற்பனை வீடுகளின் விலை குறிப்பிடத்தக்க அளவில் 2.5% ஏற்றம் கண்டது. நவம்பர் மாதத்தில் மறுவிற்பனை தொடர்பிலான பரிவர்த்தனைகள் அக்டோபர் மாதம் போல் மீண்டும் குறைவான அளவிலேயே இருந்தது. அக்டோபர் மாதத்திலான பரிவர்த்தனைகள் 1,994ஆக இருந்தது. சென்ற மாதம் இது குறைந்து 1,881 ஆனது. இருப்பினும் சென்ற ஆண்டின் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் மறுவிற்பனை வீட்டு விலைகள் 1.7% குறைவு.