பொங்கோல், புக்கிட் பாஞ்சாங் வட்டாரம் முழுவதும் 60 இடங்களில் பெட்டக வசதி

பொங்கோல், புக்கிட் பாஞ்சாங் வட்டாரம் முழுவதும் 60 இடங்களில் பெட்டக வசதி

1 mins read
a99325fa-8e67-456d-b5b7-e35a9b8b440a
-

சிங்கப்பூரிலேயே முதல் முறையாக பொங்கோல், புக்கிட் பாஞ்சாங் வட்டார மக்கள் புதிய அடுக்குப் பெட்டக முறையைப் பயன்படுத்த விருக்கின்றனர். இந்த அடுக்குப் பெட்டக வசதி, இணையம் மூலம் வாங்கப் படும் பொருட்களையும் மற்ற பொட்டலங்களையும் எளிய முறை யில் பெற்றுக்கொள்ள உதவும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படு கிறது. தகவல் தொடர்பு ஊடக மேம் பாட்டு ஆணையத்தின் முயற்சியில் இடம்பெறும் இப்புதிய முன்னோடித் திட்டத்தின் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டது. புதிய பெட்டக நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என்ப தால் இரு நகரங்களைச் சேர்ந்த 78,000 குடும்பத்தினர் பலன் அடைவார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டது.

தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி நேற்று 'லாக்கர் அலையன்ஸ்' எனும் புதிய பெட்டக வசதியைத் தொடங்கி வைத்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்