ஷெங் சியோங்கில் பணம் எடுக்கும் இயந்திரம்

ஷெங் சியோங்கில் பணம் எடுக்கும் இயந்திரம்

1 mins read
7a354b41-4fe1-4327-a22d-cd3544e04a41
-

சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு இடங்களில் பேரங்காடிகளை நடத்தி வரும் ஷெங் சியோங் நிறுவனம் அதன் பேரங்காடிகளில் பணம் எடுக்கும் இயந்திரங்களை நிறுவியிருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கி லிருந்து பணத்தை எடுக்கலாம். ஆனால் வழக்கமான ஏடிஎம் இயந்திரங்களைப் போல பணத்தை மற்ற வங்கிகளுக்கு மாற்றுவது போன்ற சேவைகளுக்கு இந்த இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது. கடந்த ஏப்ரல் மாதம் '$tm' என்றழைக்கப்படும் பணம் எடுக் கும் இயந்திரம் முதல் முறையாக அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் அமைக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் ஃபெர்ன்வேல் லிங்க்கில் உள்ள புளோக் 417ல் '$tm' இயந்திரம் நிறுவப்பட்டது. தற்போது அங் மோ கியோவில் உள்ள '$tm' இயந்திரம் வழியாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 150 பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன.