ஸ்பைஸ் உணவகத்தின் உணவால் ஏற்பட்ட உணவு நச்சு சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் பல உணவு சுகாதாரக் குறைபாடுகள் கண் டறியப்பட்டதைத் தொடர்ந்து தேசிய சுற்றுப்புற வாரியம் உண வகத்தின் ரிவர் வேலி கிளையின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்துள்ளது. அத்துடன் உணவகத்தின் குறைபாடுகள் குறித்து வாரியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதுடன் உணவகம் எதிராகக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கவுள்ளது. சென்ற மாதம் 6ஆம் தேதிக்கும் 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் ஏற்பட்ட ஏழு உணவு நச்சு சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் வழக்கத்திற்கு மாறான, மோசமான 'செல்மனெல்லா' எனப்படும் நச்சு நுண்ணுயிரியின் அளவு இருந்தது கண்டறியப்பட்டது. தேசிய சுற்றுப்புற வாரியம், சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் ஆகியவை இணைந்து நவம்பர் 14ஆம் தேதி அன்று நடத்திய சோதனைகளில் பலதரப்பட்ட சுகாதாரக் குறைபாடு கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஸ்பைஸ் உணவகத்தின் உரிமம் உடனடி ரத்து
1 mins read
-

