சிங்கப்பூர் கடல் எல்லை சர்ச்சை குறித்து 'எம்பி'க்கள் குரல்

சிங்கப்பூர் கடல் எல்லை சர்ச்சை குறித்து 'எம்பி'க்கள் குரல்

1 mins read

தங்களின் கடல் எல்லை குறித்து மலேசியாவுக்கும் சிங்கப்பூருக் கும் இடையே நிலவும் சர்ச்சை பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் கள் ஐவர் குரல் கொடுத்துள்ளனர். தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துரைத்துள்ள அவர்கள் இந்த விவகாரத்தின் முக்கியத்து வம் பற்றி விளக்கியதுடன் மலே சியாவின் உள்நோக்கம் பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளனர். நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின், ஜோகூர் பாருவின் கடல் எல்லையை விரிவாக்கம் செய்துள்ள மலேசியாவின் அண் மைய நடவடிக்கை பற்றி எடுத்து ரைக்கும் காணொளியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

"மலேசியா ஏன் இவ்வாறு செய்கிறது? சிங்கப்பூருக்கு அழுத்தம் ஏற்படுத்தும் முயற் சியா? உள்நாட்டு விவகாரங்களி லிருந்து அதன் மக்களைத் திசை திருப்பும் முயற்சியா? நமது நாட் டின் தலைமைத்துவத்தின் தைரி யத்தைச் சோதித்துப் பார்க்கும் செயலா? சிங்கப்பூரை சீர்குலைய வைக்கும் முயற்சியா? இனப் பிரிவினையை உருவாக்கும் செயலா? நமது இன, சமய ஒற் றுமையைச் சோதிக்கும் முயற் சியா?" ஆகிய கேள்விகள் அந்த இரண்டு நிமிடக் காணொளியில் இடம்பெற்றுள்ளன. "இந்தப் பிரச்சினையில் பொதிந்திருக்கும் உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கவே இந்தக் காணொளி பகிரப்படு கிறது. விழிப்பாக, தெளிவாக, ஐக்கியமாக இருங்கள் என்று மக்களைக் கேட்டுக்கொள்கி றோம்," என்றும் கூறினார் மரின் பரேட் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான திரு டான்.